Monday, 20 June 2011

குணவான்கள்-1(ஆர்வக்கோளாறு அறிவுஜீவி)

யாவும் கலப்படம் அற்ற கற்பனை . 


நாங்கள் எமது வாழ்கையில் பல்வேறுவிதமான குணாதிசயமான  நபர்களை கடந்து வந்துளோம் நானும் அவர்களில் பலரை எனது வாழ்விலே கண்டுள்ளேன் அவர்களை பற்றி ஒரு தொடர் பதிவு எழுதும் ஆவலில் உள்ளேன்.இதற்கு  நான் தேர்ந்தெடுத்த தலைப்பு குணவான்கள்.முதலிலே நான் எனது வாழ்விலே கண்ட ஒரு முழுநேர அறிவுஜீவி பற்றியும் எதனையும் சயின்ஸ்டிபிக்காக நோக்கும் ஒரு நண்பனை பற்றிய பதிவு இது .பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு ஆர்வ கோளாறு அறிவுஜீவி.  

எனது வாழ்கையில் என்னோடு கலந்த ஆருயிர் நண்பன் கோகுலன் தற்போது மருதுவ பீட மாணவனான அவன் ஒரு முன்மாதியான கடின உழைப்பாளி .என்னுடைய உயர்தர வகுப்பு கால பகுதிகள் பெரும்பாலும் அவனுடனேயே கழிந்தன.அவனால் நானும் என்னால் அவனும் கெட்டதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி கொண்டாலும் என்னால் அவனும் அவனால் நானும் கெட்டோம் என்பதே யதார்த்தம்.எனக்கும் அவனுக்கும் சரியான அலைவரிசை இருந்த போதிலும் ஒருவிடயத்தில் மாத்திரம் அவன் ஒரு மார்கமானவன்.அது அவன் ஒரு அறிவு ஜீவி உலகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழச்சிகளிற்கும் சயின்ஸ்டிபிக் ரீதியான விளக்கம் தேடுபவன் உதாரணமாக ஒரு நாய் ஓரமாக ஒண்ணுக்கடிக்கிறது என்றால் நாம் அதனை பார்த்தால் நாயிற்கு என்ன கஷ்டமோ என நினைத்து  ஒதுங்கி சென்று விடுவோம்.ஆனால் கோகுலன் அவ்வாறு  அல்ல.  ஒரு நாய் ஓரமாக ஒண்ணுக்கடிப்பதை பார்த்தல் அவனது மனதிலே எழ கூடிய சயின்ஸ்டிபிக் ரீதியான வினாக்கள்


 1)நாயை நடு ரோடில் ஒண்ணுகடிக்க தூண்டிய காரணிகள் 
 2)ஒண்ணுகடிகும் போது அதனது உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றம்
 3)ஒண்ணுக்கடிக்காவிடில் நாயின் உடம்பில் ஏற்படகூடிய ரசாயன மாற்றம்
 4)ஒண்ணுகடிகும் போது நாயால் செலவிடப்படும் சக்தியின் அளவு 
 5)ஒண்ணுகடிகும் போது நாயால் செலவிடப்படும் சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாமா?



இவ்வாறு மேதாவித்தனமாக சிந்திப்பது அவனது ஸ்டைல்.சிந்திப்பது மாத்திரம் அன்று அந்த  சிந்தனையிலையே பல மணிநேரம் இருப்பான்.பல மணி நேர தீவிர ஆய்வுகளின் முடிவில் நாய் நடு ரோட்டில் ஒண்ணுகடிக்க காரணம் நாயின் சலப்பை நிரம்பியது என்பான்(இதனை ஆரம்பத்தில் நான் சொல்லியிருந்தால் என்னை பயித்தியகாரன் என்பான் )

சிவனே என நானும் என்பாடுமாக இருந்த என்னை ,வடிவேலை பார்த்து கிங் படத்தில் ஒருவன் கேட்கும் இசை என்றால் என்ன?,இசை எங்கிருந்து வருகுது ரேஞ்சில் என்னை பார்த்து கேட்டான்  

ஒளி என்றால் என்ன ?

சித்தம் கலங்கிய நான் வடிவேல் ஸ்டைலில் சொன்னேன்

ஒளி என்றால் அன்ய பின்ய ஒளி.. 

சரி ஒளி எங்கிருந்து வருகுது ?

அட இது கூடவா தெரியாது சூரியனில் இருந்து 

என்னை கவலையாக பார்த்தவன் ஒளி என்றால் என்ன என ஆரம்பித்து ஐன்ஸ்டீனின் தியரி வரை சொல்  லி நான் போதும்  போதும்  என எவ்வளவோ மன்றாடியும்  கேட்காமல் நான் விக்கி விக்கி அழுவதை கூட பொருட்படுத்தாது என்னை கதற கதற சாவாடிச்சன் 




ஒரு நாள் தீடிரென ஈழ போராடத்தின் தோல்விக்கு காரணம் கேட்டான்

அதற்கு நான் ஏதோ அரசியல் ரீதியான காரணம் சொல்ல அதனை ஏற்று கொள்ளாத அவன் தான் அதற்கான சரியான காரணத்தை கூறுகிறேன்  என கிளம்பியவன் சில பல நாட்கள் கடும் ஆராட்சிக்கு  பின்பு கூறினான்

தமிழர்களை விட சிங்களவர்களின் போசனை மட்டம் அதிகமாக இருப்பது தான் ஈழ விடுதலை போராடத்தின் தோல்விக்கு பிரதான காரணம் என்றான்.சரி என நானும் ஆமோதித்தேன்(காரணம் ஆ மோதிக்காவிடின்  என்னை பயித்தியகாரன்  என்பான் )



இப்படிதான் தெரியாத்தனமாக ஒருமுறை இவனுடன் யட்டி வாங்க யாழ்ப்பாணம் பெரியகடைக்கு சென்றிருந்தபோது யட்டிகும் இழுவிசைகும் ஆன தொடர்பை கூறியதுடன்,யட்டியின் நீண்ட பாவனை  க்கு  நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய இழுவிசை காரணிகளை பட்டியலிட்டான்.மேலும் சயின்ஸ் மாணவர்கள் ஆன  நாங்கள் யட்டி வாங்கும் போது இழுவிசை யை  கருத்தில் கொள்ளாவிடின் எமது பிறவியில் அர்த்தமில்லை என என்னுடன் வாதிட்டான்   

இப்படிதான் ஒருநாள் ஒண்ணுக்கடிப்பதை வைத்து எனக்கு எறியத்தை விளங்கப்படுத்தினான்

குமரன் சாருக்கும் கோகுலனுக்கும் நன்றாக ஒத்து போகும்,உனது எண்ணமும்  சிந்தனையும் அப்படியே என்னை போலவே உள்ளது என கோகுலனை குமரன் சார் பாரட்டியதாக நினைவு,கடந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்த போது எனது பொழுது பெரும்பாலும் கோகுலனுடன் தான் கழிந்தது.ஜப்பானை சுனாமி தாக்கிய காலகட்டமான அப்போது ஏறத்தாள ஒரு கிழமையாக கோகுலனும் குமரன் சாரும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.அதாவது சுனாமி தாக்கத்தால் ஏற்பட்ட கதிர் வீ ச்சு தாக்கத்தை எவ்வாறு கட் டுப்படுத்தலாம் என்பதாகும்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு அதற்கு ஒண்டும் செய்ய முடியாது என கூறினால் என்னை பயித்தியகாரன் என கூறுவார்கள் என தெளிவு இருந்த நான் எதுவும் கூறாமல் சித்தம் போக்கு சிவன் போக்காக இருந்துவிட்டேன்.

பல நாள் தொடர்ந்த ஆராச்சியின் விளைவாக அவர்கள் எடுத்த முடிவு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக் கத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு ஒண்டும் செய்ய முடியாது



நீண்ட நாட்களிற்கு பிறகு தீடிரென எனது போனின் திரை கோகுலன் அழைப்பதாக காட்டியது

ஆவலுடன் பேச ஆரம்பித்தேன்

கோகுலன்-Hello machan,எப்படி சுகம் 

நான் -பரவாயில்லடா,not better than you.

கோகுலன்-மச்சான் நீ எழுதின சிங்கள பேரினவாத தேசம் கட்டுரை படிச்சன்.என்ட பேரும் யூஸ் பண்ணி இருந்தாய்.

நான்-நீ தப்பா நெனைக்க மாட்டாய் எண்டு எனக்கு தெரியும் மச்சான்,நீ என் நண்பேண்டா   

கோகுலன்-அது சரி ஆனா நீ அதில சயின்ஸ் ஹால் பிள்ளையள்  ஒண்ணுக்கடிப்பதில் உள்ள சிக்கலுகளை எழுதி இருந்தாய் 

நான்-அது பழைய கத மச்சான் 

கோகுலன்- நான் அதுக்கு தீவிரமா ஆராய்ச்சி செய்து சயின்ஸ்டிபிக்கா ஒரு தீர்வு வச்சிருக்கன்,மச்சான் நீ கேளேன் .

நான்-ஹலோ ஹலோ ,சிக்னல் ப்ரொப்லம்.தெளிவா கேக்குது இல்லடா

போனை சுவிட்ச் ஆப் பண்ணிய  நான்,கடைக்கு சென்று முன்று போத்தல் குளிர் நீர் குடித்தும் அந்த பீதி என்னை விட்டு போகவில்லை.


இப்போதும்  கூட இரவு நேரங்களில் தொலைபேசி ரிங் ஆகும் வேளைகளில் கோகுலனாக இருக்குமோ என பயந்து சில வேளைகளில் பாயிலேயே ஒண்ணுக்கடித்து விடுகிறேன்  

10 comments:

Ashwin-WIN said...

ஹா ஹா ஹா.. கலக்கல் கலக்கல் கலக்கல்... விஞ்ஞானி கோகுலன் வாழ்க வாழ்க....

Ashwin-WIN said...

//இப்படிதான் தெரியாத்தனமாக ஒருமுறை இவனுடன் யட்டி வாங்க யாழ்ப்பாணம் பெரியகடைக்கு சென்றிருந்தபோது யட்டிகும் இழுவிசைகும் ஆன தொடர்பை கூறியதுடன்,யட்டியின் நீண்ட பாவனை க்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய இழுவிசை காரணிகளை பட்டியலிட்டான்.மேலும் சயின்ஸ் மாணவர்கள் ஆன நாங்கள் யட்டி வாங்கும் போது இழுவிசை யை கருத்தில் கொள்ளாவிடின் எமது பிறவியில் அர்த்தமில்லை என என்னுடன் வாதிட்டான் //
இதுக்கே இப்புடி யோசிக்குரானே.. அப்போ அது அதுக்கெல்லாம் என்ன பண்ணுவான்?????

Selvarajah.Kokulan said...
This comment has been removed by the author.
Selvarajah.Kokulan said...

Thurooki.... pacha turooki...

Thejo said...

ha ha ha tht sounds like kokulan alright. Vidaathu sani machchi...enga ponaalum phone pottu rambam pannuraan pola :D Brought back good old memories. :)

Selvarajah.Kokulan said...

Thejo i'm pavam!
Really i went back to those golden days...

IT Partner said...

Ha !!! Ha !!!

அமரேஷ் said...

இந்த துன்பியல் அனுபவங்களை உனக்கு அடுத்தபடியாக அனுபவித்தவன் நான்...இப்பவும் தொடர்ச்சியாக சளைக்காமல் களத்தில் அமரேஷ்..இவனிடம் வருங்காலத்தில் வைத்தியத்திற்கு யாரும் தலையிடிக்கு போனால் இவன் 2 மணித்தியால consulting time க்கு பேந்து சொல்லுவான்..ஐயா உங்களுக்கு வயசு 32...எண்டு தொடங்கி..நீங்கள் மருந்து போட்டால் 5 வருசத்தில செத்திடுவியள்..போடாட்டி 4 வருசத்தில செத்திடுவியள்..ஆனா மருந்து செலவ ஒப்பிடேக்க நீங்க மருந்து போடாமயே செத்துடலாம் எண்டு சொல்லி திருப்பி அனுப்புவான்..அவ்வளவு குணவான் அவன்...

நண்பேன்டா... said...
This comment has been removed by the author.
நண்பேன்டா... said...

மச்சான்... நான் நேற்று கோகுலன்ட றூம்ல நின்டனான்..
அவன் நித்திரையில திடீரெண்டு எழும்பி அருளி பு.... அருளி பு.... எண்டு புலம்பினவன்.. #
பாவம்... யார் பெத்த பிள்ளையோ...